வெளிச்சத்துக்கு வராமல் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர்களை அடையாளம் காட்டுவேன் – ஜி.வி.பிரகாஷ் !

சினிமாவில் பிசியாக இருந்துகொண்டே சமூக செயற்பாட்டாளராகவும் இருக்கும் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிச்சத்துக்கு வராமல் அதே நேரத்தில் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர்களை நானே நேரடியாக அவர்கள் இடத்துக்கு சென்று பேட்டி எடுத்து வெளி உலகத்துக்கு காட்ட உள்ளேன். மகத்தான மனிதர்கள் என்ற பெயரில் என்னுடைய யூடியூப் சேனலில் இது ஒளிபரப்பாகும். இதை டிவியில் செய்தால் அது வியாபார நோக்கமாகி விடும். சுதந்திரமாக இந்த நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக லாப நோக்கு துளிகூட இல்லாமல் யூடியூபில் வெளியிடுகிறேன்.ஜவ்வாது மலையில் ஆசிரியையாக இருக்கும் மகாலட்சுமி என்பவர். குக்கிராமங்களில் இருக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களை கல்வி பயில வைத்துள்ளார். அவரை பேட்டி எடுத்ததே மகத்தான அனுபவம். எனது சமூக செயற்பாட்டு குழுவில் இருக்கும் குணா இயக்கி உள்ளார்.