வெளிநாடுகளில் வெளியாகும் பாலாவின் வர்மா !

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற படமான அர்ஜுன் ரெட்டி தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் உருவானது. அந்த படத்தில் முதல் நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் கிரிசயா தமிழில் இயக்கினார். விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற இந்த படம் வசூல் ரீதியில் வரவேற்பைப் பெறவில்லை. இந்த படத்தை இயக்குனர் பாலா வர்மா என்ற பெயரில் இயக்கினார். அதில் துருவ் விக்ரம், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் அதன் இறுதி வடிவம் சரிவராது திருப்தி தராததால் அந்த படத்தை கைவிட்டுவிட்டார்கள். தற்போது கைவிடப்பட்ட இந்த படம் வெளிநாடுகளை வெளியாகவுள்ளது. இதற்காக சிங்கப்பூர் தணிக்கை குழு படத்தை பார்த்து அங்குள்ள தணிக்கை விதிமுறைகளின்படி 16-வயதுக்குக்கீழ் இருப்போர் இந்த படத்தைப் பார்க்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தின் கதைக்களம் உள்ளிட்ட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. சிங்கப்பூரை தொடர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் படம் வெளிவருமா என்பது சில நாட்களில் தெரிய வரும் என்கிறார்கள்.