வெளிநாட்டில் தெருவில் ஆடி மகிழ்ந்த ஸ்ரேயா!

நடிகர் நடிகையர் அவ்வப்பொழுது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவது வழக்கம்.  பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா தற்போது நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. இதற்கிடையில் தமிழில் புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் காத்திருக்கிறார். சமீபத்தில் வெளிநாடு சென்ற ஸ்ரேயா அங்குள்ள இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தார். பின்னர் அப்பகுதியில் நடந்த திருவிழாவுக்கு சென்றவர் அங்கு நடந்த காட்சிகளை ரசித்தார். உற்சாக மிகுதியில் நடுரோட்டிலேயே நடனம் ஆடத் தொடங்கினார்.