வெளிமாநில கதாநாயகிகளுக்கு என்ன திறமை உள்ளது?: கேள்வி எழுப்பும் நடிகை!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குனராக அறிமுகமாகும் படம் – 'மிக மிக அவசரம்' பெண் காவலராக நடிகை பிரியங்கா நடித்துள்ளார், ஹரிஷ் குமார், சீமான் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை இஷான் தேவ். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பிரியங்கா பேசியதாவது. இந்தமாதிரி கதையும்,கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு இப்பொழுதுதான் கிடைத்துள்ளது, ஆனால் எனக்கு குறுகிய காலத்திலேயே இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது. வெளிமாநிலத்தில் வரும் நடிகைகளுக்கு என்ன திறமை இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்களுக்கு வாய்ப்பை தேடிப்போய் தரும்பொழுது ஏன் எங்களுக்கு தரக்கூடாது. தமிழ் பெண்களாலும் பெரிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கமுடியும் என்பதை இங்குள்ள இயக்குனர்கள் நம்பவேண்டும். அப்போதுதான் எங்களாலும் மேலே வரமுடியும். இவ்வாறாக அவர் கூறினார்.