வெளிவர தயாரா இருக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா!

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படம் தணிக்கைக்கு அனுப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.