வெள்ளித்திரைக்கு வரும் வேட்டையன் !

ஊடக எல்லைகள் தாண்டி திறமையானவர்கள், ரசிகர்களை வசீகரிக்கக்கூடியவர்கள் வென்று வருகிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவி 'சரவணன் மீனாட்சி' தொடரில் 'வேட்டையன்' என்ற புகழ்பெற்ற பாத்திரத்தில் நடித்த கவின் 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் நாயகனாக என்ட்ரி கொடுக்கிறார். கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்தப் படத்தில் 'கனா' இயக்குனர் அருண்ராஜா காமராஜும் நடித்துள்ளார். ராஜு, அழகம்பெருமாள், ’மொட்ட’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு தரண் இசையமைத்துள்ளார். பாடல்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி, மிர்ச்சி விஜய் எழுதியுள்ளனர். சந்தானம், சிவகார்த்திகேயன் என வெற்றி வரிசையில் சேர கவினை வாழ்த்துவோம்.