வேற்றுகிரகவாசிகள் படத்தில் நடிக்கும் ஆரி !

அ.செ.இப்ராஹிம்  ராவுத்தரின் மகன் முகமது அபுபக்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான். கவிராஜ் இயக்கியுள்ளார். இதில்  நடித்தது குறித்து ஆரி பேசியதாவது: இந்த தலைமுறையில் வேற்றுகிரகவாசிகளை மையமாக  வைத்து உருவான படத்தில் நடித்தது குறித்து பெருமைப்படுகிறேன். அறிவியல் புனைகதைகள் மற்றும் வேற்றுகிரகவாசிகள் சார்ந்த காட்சிகளை படமாக்க, ஹாலிவுட்டில் 1,000 கோடி ரூபாய் வரை செலவு செய்வார்கள். அந்த தரத்துக்கு இணையான கிராபிக்ஸ் காட்சிகளுக்காக, எங்கள் யூனிட் ஒரு வருட காலம் கடுமையாக உழைத்துள்ளது.  நிஜமாகவே வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா, இல்லையா என்ற விடையை இப்படம்  சொல்லும்.