வைரமுத்துவுக்கு எதிராக மீண்டும் புகார்- பாடகி சின்மயி!

வைரமுத்து மீது பெண்களுக்கான தேசிய கவுன்சிலில் பாடகி சின்மயி புகார் அளித்துள்ளார். மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய புகார் திரையுலகத்தில் பெரும் சர்ச்சையானது. தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீது மீ டூ புகார்கள் வந்தன. இது போன்ற புகார்களால் கடும் சர்ச்சைக்கு சின்மயி உள்ளானார். தொடர்ச்சியாக வைரமுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அவருடைய பேச்சை வைத்து தமது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி விமர்சித்து வந்தார். இந்நிலையில் முதன்முறையாக வைரமுத்து மீது பெண்களுக்கான தேசிய கவுன்சிலில் புகார் அளித்துள்ளார் சின்மயி.