வைரலாகும் விஜய் சேதுபதி டியர் காம்ரேட் ஆன்தம் !

அறிமுக இயக்குநர் பாரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டியர் காம்ரேட். கீதா கோவிந்தம் திரைப்படத்துக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா ஜோடி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. ஜூலை 26-ந்தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் ரிலீசை முன்னிட்டு புரொமோ‌ஷன் பணிகளில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நான்கு மொழிகளிலும் இந்தப் படத்தின் ‘காம்ரேட் ஆன்தம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடலின் தமிழ் வெர்‌ஷனில், விஜய் சேதுபதி பாடியுள்ளார். மேலும் ஸ்டோனி சைகோ, டோப் டேடி ஆகியோரும் உடன் பாடியிருக்கின்றனர். வா ஒன்னா சேரலாம் வா என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் துடிப்பான இசை மற்றும் வரிகளுடன் ஈர்க்கிறது.