வைரலாகும் விஷாலின் வருங்கால மனைவியின் புகைப்படம்!

நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் விஷால். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். அரசியல் கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆர்யாவும் நானும் ஒரே மேடையில் திருமணம் செய்வோம் எனக் கூறிவந்தார். ஆர்யாவுக்கு அவர்கள் வீட்டில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார். அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. திருமணம் குறித்து விஷால் கூறியதாவது:- எனது திருமணம் பற்றி தவறான தகவல்கள் பரவுகின்றன, “எனக்கும் அனிஷாவுக்கும் இந்த வருடம் திருமணம் நடைபெறும். நாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து கொள்ளும்போது காதல்வயப்பட்டோம், எங்கள் காதலை வீட்டில் தெரியப்படுத்தினோம் . இருவீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள், இருவீட்டாரும் கலந்து பேசி திருமண தேதியை முடிவு செய்வார்கள்.  நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை. எனது திருமணம் சென்னையில் தான் நடைபெறும்.”