ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்!

ஷங்கர் தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். 2.0, இந்தியன் 2 என்று 2 சீரியசான கதைகளை அடுத்தடுத்து இயக்கியதால் தனது அடுத்த படத்தில் இளமைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் எடுக்க முடிவு செய்து இருக்கிறார் என்கிறார்கள். ஷங்கர் கடைசியாக இளைஞர்களை கவரும் வகையில் பாய்ஸ் என்ற படத்தை இயக்கினார். அதுபோன்ற ஒரு கதையை தான் இயக்க இருப்பதாக செய்தி வெளியாகயுள்ளது, இந்த படத்தில் விஜய் மகன் சஞ்சய் மற்றும் விக்ரம் மகன் துருவ் இருவரையும் நடிக்க வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.