ஷங்கர் படத்திற்கு நோ சொன்ன R.J.பாலாஜி !

எந்திரன் 2.0 என்று மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கிய ஷங்கர் தற்பொழுது இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார். இடையில் தடைபட்டிருந்த இந்தியன் 2 பணிகள் தற்போது வேகவேகமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, ஆர் ஜே பாலாஜியை அணுகியுள்ளனர் படக்குழுவினர். ஆனால் அவர் நோ சொன்னது தான் இப்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. LKG படத்தின் வெற்றியைத்தொடர்ந்து பாலாஜி கதாநாயகனாக நடிக்க சில படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளார். அவருக்கான மார்க்கெட் அதிகரித்திருக்கிறது. மேலும் தானே திரைக்கதையை எழுதி ஒரு படத்தை இயக்கும் வேலையிலும் ஆர் ஜே பாலாஜி ஈடுபட்டுள்ளார். அதன் காரணமாகவே ஷங்கர் படத்திற்கு நோ சொல்லிவிட்டார் ஆர் ஜே பாலாஜி. ஷங்கரே கூப்பிட்டு விட்டார் என்று முதலில் சந்தோஷத்தில் ஓகே சொன்னார் பாலாஜி. ஆனால் இயக்குனர் ஷங்கர் 150 நாட்கள் கால்ஷிட் கேட்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் ஷாக் ஆகியுள்ளார் பாலாஜி. மற்ற பட வாய்ப்புகளை இதனால இழக்க வேண்டி வரும் என்பதால் பிறகு இந்தியன் 2 பட வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.