ஷங்கர் படத்தில் மீண்டும் சீயான் விக்ரம் !

கடாரம் கொண்டான் படம் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. விக்ரம் மலையாளத்தில் ஒரு சேனலுக்கு பேட்டியளித்தார். பல கேள்விகளுக்கு மலையாளத்தில் பதிலளித்த அவர், தனக்கு விருப்பமான இயக்குநர்களாக மணிரத்னம், ‌ஷங்கர் பெயர்களைக் குறிப்பிட்டார். மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்து பொன்னியின் செல்வனில் நடிக்கவுள்ள அவர், ‌ஷங்கரோடு எப்போது இணைந்து பணியாற்றுவார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இரண்டு, மூன்று வருடங்களில் நான் அவரது இயக்கத்தில் நடிப்பேன். அதற்கு முன் விஜய்யை கதாநாயகனாகக் கொண்டு ‌ஷங்கர் படம் இயக்கவுள்ளார்” என்று கூறியுள்ளார்.