Cine Bits
ஷாருக்கான் மகள் படம் நடிக்க தயார்…
நடிகர் ஷாருக்கானின் மகள் சுகானாவுக்கு 17 வயது ஆகிறது. தற்போது அவருக்கு நடிக்கும் ஆசை வந்ததால் நடிப்பு, நடன பயிற்சி பெற்று வருகிறார். இதனால் அவரின் தந்தை மூலம் கதை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அவர் நிருபர்களிடம் “சுகானாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது. நடிப்பதற்கான திறமையும், தோற்றமும் அவளுக்கு உள்ளது. முதலில் படிப்பை முடித்து விட்டு அதன் பிறகு மற்ற விஷயங்கள் குறித்து யோசிக்கும் படி நான் அறிவுரை கூறியிருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதனால் இயக்குனர்கள் பலர் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க கதைகளுடன் அவரின் தந்தையை அணுகி வருகிறார்கள். அவரின் பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.