Cine Bits
ஸ்ரீதேவியின் நினைவு நிகழ்ச்சியில் அஜித், ஷாலினி பங்கேற்பு!

கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார். ஸ்ரீதேவி கணவர் போனிகபூர், இந்தி நடிகர் அனில்கபூர் மற்றும் உறவினர்களும் கலந்துகொண்டனர்.