ஸ்ரீதேவியின் வாழ்க்கை கதை படம்…
நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் படங்களில் நடித்து இந்தி திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து, துபாயில் ஓட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தது திரையுலகை உலுக்கியது. அவர் 300 படங்களில் நடித்து பத்மஸ்ரீ விருது பெற்று உள்ளார். இவரின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க அவரது கணவர் போனிகபூர் திட்டமிட்டுள்ளார். தற்போது இந்தி இயக்குனர் ஹன்சல் மேத்தா அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், அது முடியாமல் போனதால் தற்போது அவரின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க இருப்பதாக கூறியுள்ளார். ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இந்த படத்தில் அவரின் பண கஷ்டம் ஏற்பட்டது, தவறான சிகிச்சையால் அவரது தாய் மரணம் அடைந்தது, ஆஸ்பித்திரி நிர்வாகம் மீது கோர்டியில் வழக்கு தொடர்ந்தது, துபாயில் மரணம் அடைந்தது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளனர். ஹீரோக்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.