ஸ்ரீதேவி இறப்பில் மர்மம் பரபரப்பை ஏற்படுத்திய கேரள டிஜிபி

துபாயில் நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என்று கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். கேரளா போலீசின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார். உமாடாதன் கூறியதாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் ஶ்ரீதேவி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது அபத்தம். அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது. அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால்தான் மரணிக்க முடியும் என்பதும் உமாடாதனின் கருத்து. ஶ்ரீதேவியின் மரணம் பற்றி அறிய உமாடாதனை சந்தித்தேன். அப்போதுதான் ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்தார் இவ்வாறு டிஜிபி ரிஷிராஜ்சிங் கூறியுள்ளார்.