ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கும் தமன்னா !

நடிகர்-நடிகைகள் வாழ்க்கை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. சில்க் சுமிதா, சாவித்திரி ஆகியோரின் வழக்கை படங்களுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு எழுந்தது அதையொட்டி ஸ்ரீதேவியின் வாழ்க்கையை அவரது கணவர் போனிகபூர் படமாக்கவுள்ளார். ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது. இந்த நிலையில் மும்பையில் பேட்டி அளித்த தமன்னா ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஸ்ரீதேவி வாழ்க்கையை படமாக எடுத்தால் அவரது வேடத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஸ்ரீதேவியாக நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சிறுவயதில் இருந்தே எனக்கு ஸ்ரீதேவி பிடித்த நடிகை! என்றார்.