ஸ்ரேயா: திருமண தகவல் தவறானது…

நடிகை ஸ்ரேயா உனக்கு 20 எனக்கு 18 படத்தில் அறிமுகமாகி, விஜய்,ரஜினியுடன்  நடித்து பிரபலமானார். தற்போது அவருக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கும், அவரது ரஷ்ய பாய் நண்பருக்கும் மார்ச் மாதம்  திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அவரின் தாயார் நீர்ஜா ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது.”ஸ்ரேயாவுக்கு  திருமணம் என்ற தவறான செய்தி பரவியுள்ளது. அவர் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். ராஜஸ்தானில் ஒரு நண்பரின் திருமணத்திற்கு செல்வதற்கு டிசைனரிடம் ஜுவல்லரி, மற்றும் டிரஸ் ஆர்தர் கொடுத்துள்ளார். இதனை தவறாக புரிந்து கொண்ட மீடியாக்கள் அவருக்கு திருமணம் என்று வதந்தியை பரப்பியுள்ளனர். இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் நடித்த காயத்திரி படம் இன்று வெளியாகிறது என்றும் கூறியுள்ளார்.