ஸ்லிம் சிம்பு, தம்பியின் சிம்பிள் திருமணம் !

குறளரசன் – நபீலா அஹமத் ஆகியோரது திருமணம் இன்று சென்னை, அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. மிகவும் எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமக்கள் வீட்டார் மட்டுமே இருந்தனர். குறளரசன் – நபீலாவின் வரவேற்பு வரும் 29-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. திருமணத்தை வீட்டிலேயே சிம்பிளாக முடித்ததால், வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த உள்ளனர். உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனுக்குச் சென்ற நடிகர் சிம்பு, தன் தம்பியின் திருமணத்தை முன்னிட்டு நேற்றிரவு சென்னை திரும்பி தம்பியின் திருமணத்தில் கலந்து கொண்டார்.