Cine Bits
ஹன்சிகாவின் மஹா படப்பிடிப்பில் சிம்பு

யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்பு – ஹன்சிகா இந்த படத்தில் கணவன் – மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். இதில் மாநாடு படத்திற்காக வெளிநாடு சென்று தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.