ஹன்சிகாவுடன் மறுபடியும் ஜோடி சேர்ந்து நடிக்கும் சிம்பு!

ஹன்சிகாவின் 50வது படம் மஹா சிம்பு கவுரவத் தோற்றத்தில் வருகிறாராம். மஹா படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்குமாறு இயக்குநர் ஜமீல் சிம்புவிடம் கேட்க அவர் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டாராம். சிம்புவும், ஹன்சிகாவும் ஒரு காலத்தில் காதலித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வாலு படத்தில் நடித்தபோது தான் சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. சிம்பு கதாபாத்திரத்தின் பெயர் சோயப், பிளாஷ்பேக் காட்சிகளில் வருவாராம். தற்போது லண்டனில் இருக்கும் சிம்பு மஹா படப்பிடிப்புக்காக இஸ்தான்புல் செல்கிறாராம். முன்னாள் காதலியான ஹன்சிகாவுடன் நடிக்கவிருக்கிறார் சிம்பு. இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.