ஹன்சிகா முதல் முறையாக வில்லி

கதாநாயகியாக அறிமுகமான கொஞ்ச காலம் வரை  ஹெராயின்  அதன்பின்  ஒருகட்டத்திற்கு பிறகு வில்லி வேடம் என்றால் கூட ஒகே சொல்லி விடுகிறார்கள். ஹன்ஷிகா தமிழில் வில்லி அல்ல, மலையாளத்தில் உருவாகிவரும் 'வில்லன்' என்கிற படத்தில். அதுவும் மோகன்லால், விஷால், இயக்குனர் உன்னிகிருஷ்ணன் என்கிற மிகப்பெரிய கூட்டணியுடன்.. இந்த அனுபவம் பற்றி ஹன்ஷிகா என்ன சொல்கிறார்..?

“எனது கேரியரில் நான் ஒருமுறையாவது மலையாளத்தில் ஒரு படம் நடித்துவிட வேண்டும் என்று என் அம்மா சொல்வார். அதற்கேற்ற மாதிரி இதுவரை நான் நடிக்காத கேரக்டர் ஒன்றை பற்றி இயக்குனர் உன்னிகிருஷ்ணன் சொன்னபோது அதை எப்படி ஒதுக்க முடியும்..? நெகடிவ் என முற்றிலும் சொல்லமுடியாத, அதேசமயம் கொஞ்சம் வில்லித்தனம் கலந்த கேரக்டரில் தான் நடிக்கிறேன்.