Cine Bits
ஹன்சிகா, விக்ரம்பிரபுடன் இணையும் முதல் படம் “துப்பாக்கி முனை”

விக்ரம்பிரபு, கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அரிமா நம்பி என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படத்தை தொடர்ந்து அவருடைய படங்கள் சரியாக ஓடாமல் இருந்தாலும் மீண்டும் இவர் இந்த நிறுவனத்திக்காக அறிமுக இயக்குனரான தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் “துப்பாக்கி முனை” தலைப்பில் நடிக்கின்றார். இதில் நாயகியாக ஹன்சிகா இணைந்துள்ளார். தமிழில் படங்களில் ஹன்சிகாவிற்கு மார்க்கெட் இல்லாததால் இவருக்கு ஜோடியாகிறார். ஹன்சிகா, விக்ரம்பிரபுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக நடந்து வருகிறது. விக்ரம்பிரபு இந்த படத்தை தவிர “பக்கா” என்ற மற்றொரு படத்தில் நடித்துவருகிறார். இந்தப்படம் விரைவில் வெளியாகிறது.