ஹரீஷ் கல்யாண் ஜோடியாகும் டிகங்கனா சூர்யவன்ஷி!

இயக்குநர் இரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்திற்குப் பிறகு, 'தனுசு ராசி நேயர்களே' என்ற படத்தில் நடித்து வருகிறார் ஹரீஷ் கல்யாண். இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்ட படக்குழு, டிகங்கனா சூர்யவன்ஷியை ஒப்பந்தம் செய்துள்ளனர். பல இந்தி சீரியல்கள், நான்கு இந்திப் படங்கள் என நடித்து பாப்புலரானவர், டிகங்கனா. தவிர, சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் பங்குபெற்றுள்ளார். ரைசாவைத் தொடர்ந்து, மற்றொரு பிக் பாஸ் நாயகியுடன் நடிக்க இருக்கிறார், ஹரீஷ் கல்யாண்.