Cine Bits
ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் சுந்தர்.சி ஹிப் பாப் தமிழா கூட்டணி !
இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில், ராணா இயக்கத்தில் ஹிப் பாப் தமிழா கதாநாயகனாக நடிக்கும் படம் 'நான் சிரித்தால்'. இசையமைப்பாளரான ஹிப் பாப் தமிழா, இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் மீசையை முறுக்கு, அடுத்து அவர் நாயகனாக நடித்த படம் நட்பே துணை, மூன்றாவதாக நாயகனாக நடிக்கவுள்ள படம் நான் சிரித்தால். இம்மூன்று படங்களுமே இயக்குனர் சுந்தர். சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரண்டு படங்களுமே நன்கு வெற்றியடைந்த படங்கள் இதைதொடர்ந்துவெளியாகும் இப்படமும் வெற்றியடைந்தால் சுந்தர்சி ஹிப் பாப் தமிழா கூட்டணி ஹாட்ரிக் கூட்டணியாகும். இப்படத்தின் முதல் பார்வையை அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.