ஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்

தமிழில் பாரிஸ், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடிக்கும் காஜல் அகர்வால், ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது புதுப்படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸ் மூலம் சினிமாவில் இருந்து இன்னொரு கட்டத்தை நோக்கி செல்கிறேன். இந்தியில் ஜான் ஆப்ரகாம் ஜோடியாக மும்பை சஹா படத்தில் நடிக்கிறேன். தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் உருவாகும் பிராட்ஸ்டர்ஸ் என்ற படத்தில் விஷ்ணு மன்ச்சுவுடன் சேர்ந்து நடிக்கிறேன். கதையும், என் கேரக்டரும் பிடித்திருந்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பேன். திரையுலகில் இத்தனை வருடங்களுக்கு பிறகும் வெற்றிகரமான ஹீரோயினாக நீடிப்பது குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். இது எனக்கு கிடைத்த பரிசு என்கிறார் காஜல் அகர்வால்.