ஹாலிவுட் பட ரீமேக்கில் விமலுக்கு ஜோடி ஸ்ரேயா சரண் !

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் விமல். இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் இவரது நடிப்பில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஹாலிவுட்டில் இயக்குனர் Anne Fletcher இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான தி ப்ரோபோசல் படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாம். இதில் நடிகர் விமல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரேயா சரண் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் ஆர்.மாதேஷ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.