ஹாலிவுட் பிரபலத்துக்கு குரல் கொடுக்கபோகும் ஐஸ்வர்யராய்

ஏஞ்சலீனா ஜூலி சிறு இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள ஹாலிவுட் படம் மேல்பிசன்ட் மிஸ்ட்ரி ஆஃப் ஈவில். ஏஞ்சலீனாவுடன் எல்லி பான்னிங் நடித்துள்ளார். ஜோச்சிம் ரோனிங் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி இந்தியில் இந்த படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கியது.
இதில் ஏஞ்சலீனாவுக்கு ஐஸ்வர்யராய் டப்பிங் பேசுகிறார். இதுவரை பிற நடிகைகளுக்காகவோ தான் நடிக்காத படத்துக்காகவோ ஐஸ்வர்யா டப்பிங் பேசியது கிடையாது. முதல்முறையாக இன்னொரு ஹீரோயினுக்கு இந்த படத்தில் டப்பிங் பேசுகிறார்.