ஹிச்சிகி படம் மார்ச் 23 வெளியீடு

சித்தார்த் மல்கோத்ரா இயக்கி உள்ள ஹிச்சிகி படத்தை யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் மனிஷ் சர்மா தயாரிக்கிறார்.இந்த படத்தின் நாயகியாக ராணி முகர்ஜி நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 23ம் தேதி வெளியிடுவதாக அறிவித்து தற்போது தேதியே மாற்றியுள்ளார்கள். இதுகுறித்து தயாரிப்பாளர் மனிஷ் சர்மா”இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப படமாக உருவாகி உள்ளது. இப்படம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்பதால் மாணவர்களுக்கு தேர்வு நடந்து முடிந்த பிறகு அவர்களும் வந்து பார்க்கும் வகையில் மார்ச் 23ம் தேதி படம் வெளியிடுவதாக கூறியுள்ளார்.