Cine Bits
ஹீரோவாகவிருந்து வில்லனாக மாறும் விஜய்சேதுபதி !
பெரிய நாயகன் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தனெக்கென தனி இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமா என்ற நிலையை கடந்துவிட்டார். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியுடன், மலையாள சினிமாவில் ஜெயராமுடன் நடித்துவிட்டார். விரைவில் ஹிந்தியில் அமீர் கானுடன் நடிக்க உள்ளார். ஏற்கனவே மாதவன், ரஜினி போன்றவர்களுக்கு எதிராக நடித்தார். தற்பொழுது விஜக்கும் வில்லன் ஆகிவிட்டார். தெலுங்கில் உப்பேன்னா படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இவரது படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.