ஹீரோ டூ வில்லன் – சிம்புவின் அடுத்த படம் !

நீண்ட நாட்கள் திரையில் தோன்றாத சிம்பு, சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் மற்றும் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்களில் நடித்திருந்தார். உடல் எடையை குறைக்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள சிம்பு, ஹன்சிகா நடிக்கும் “மகா” படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கும் “மாநாடு” திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.  தற்போது நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க சிம்புவை தேர்ந்தெடுத்துள்ளது படக்குழு.  இந்த படத்தில் நடிக்க சிம்புவும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.