ஹீரோ பட தாயாரிப்பாளருக்கே சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த கால்ஷீட் !

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’ ராஜேஷ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்க சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ படம் விரைவில் வெளிவரவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து ரவிகுமார், விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது நடித்துள்ள ‘ஹீரோ’ பட தயாரிப்பாளர் ராஜேஷுக்கு அடுத்தடுத்து 3 படங்கள் நடித்துத் தர சிவகார்த்திகேயன் ஒப்புதல் தந்துள்ளார். ஆகவே அடுத்த 2 ஆண்டுகளுக்கு இத்தயாரிப்பு கூட்டணியில்தான் சிவகார்த்திகேயன் படங்கள் வெளிவர உள்ளன.