ஹுமா குரேசி: தொடர்ந்து தென்னிந்திய படங்கள்

ஹுமா குரேசி 'காலா' படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். இந்த படப்பிடிப்பில் ரஜினியின் எளிமையையும், தன் மகள் போன்று தன்னிடம் பாசம் காட்டியதையும், வீட்டில் இருந்து உணவு வரவைத்து விருந்து கொடுத்ததையும் பெருமையாக சொல்கிறார். அவருக்கு தமிழ் மரபு,கலாச்சாரம் இவற்றை மிகவும் பிடித்ததால் தொடர்ந்து தென்னிந்திய மொழிப்படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.இந்த படத்திற்கு பிறகு தென்னிந்தியாவுக்கு இடம் பெயரவும் வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ் தெலுங்கு இயங்குனர்கள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.