ஹைதராபாத்தில் வீடு வாங்க விரும்பும் – நிவேதா தாமஸ் !

தமிழில் கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்’ படத்தில் நடித்து பிரபலமான நிவேதா தாமஸ் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரது புரோசாவாரெவருலா தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. எனக்கு நடன கலைஞராக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஐந்து வயதில் இருந்தே நடனம் கற்று வந்தேன். இப்போது நடிகையாகி விட்டேன். தந்தை மகள் உறவை இந்த படம் பேசும். சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளும் படத்தில் இருக்கும். நான் என்ன செய்தாலும் ஒழுங்காக செய்வேன். ஒரே மாதிரி கதைகளில் நடிக்க பிடிக்காது. தமிழ் படங்களில் நடிப்பதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஜென்டில்மேன் படத்துக்கு பிறகு தெலுங்கில் எனக்கு அதிக படவாய்ப்புகள் வந்தன. ஐதராபாத்தில் வீடு இன்னும் வாங்கவில்லை. விரைவில் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறேன் இவ்வாறு நிவேதா தாமஸ் கூறினார்.