அஜித்துடன் மோதும் நயன்தாராவின் கொலையுதிர் காலம் தாக்குப்பிடிக்குமா !
அஜித்குமார்-வித்யாபாலன் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் நாளை மறுநாள் திரைக்கு வருகிறது. வினோத் இயக்கி உள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். பிங்க் இந்தி படத்தின் ரீமேக்காக தயாராகி உள்ளது. இதில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படம் வருகிற 9-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் திரைக்கு வருவதில் ஏற்கனவே பல தடங்கல்கள் ஏற்பட்டன. கடந்த ஜனவரியிலேயே படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டனர். இவ்வாறாக 7 முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தடைகளை தாண்டி வருகிற 9-ந் தேதி கொலையுதிர் காலம் படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் மீண்டும் அறிவித்து உள்ளனர். அஜித் படத்துடன் நயன்தார தாக்குப்பிடிக்குமாவென பொறுத்திருந்து பார்ப்போம்.