Cine Bits
            
 
          அஜித்தை விட்டு சூர்யாவிற்கு வில்லனாகும் பிரசன்னா !
 
          
              சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதில் வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஞ்சாதே, துப்பறிவாளன், திருட்டு பயலே 2 போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
                            
              
              
               
            
 
           
        