அஞ்சலி பாப்பா பேபி ஷாமிலியின் புதிய அவதாரம் !
தமிழில் விக்ரம்பிரபுக்கு ஜோடியாக வீரசிவாஜி படத்தில் நாயகியாக அறிமுகமான ஷாம்லியை, அதன்பின் தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளவே இல்லை. இதனை பொருட்படுத்தாத அவர், அஜித்தைப் போன்று பல துறைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது ஓவியராக ஷாம்லி புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக, பிரபல ஓவியர் ஏ.வி.இளங்கோவிடம் முறையாக ஓவியம் வரைய கற்றுக்கொண்ட அவர், சமீபகாலமாக ஓவியங்கள் வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், அவர் வரைந்த ஒரு சில ஓவியங்கள் பெங்களூரு ஓவியக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.அதில், ஷாமிலி வரைந்திருந்த பெண்களின் அரைநிர்வாண ஓவியங்கள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. கலை நுணுக்கத்துடன் அவர் வரைந்த ஓவியங்களை பலரும் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. நடிகை ஷாமிலி நடிப்பை கைவிட்டு முழுமுழுக்க ஓவியத் துறையில் இறங்கியுள்ளார் ஷாமிலி.