அனுமதியின்றி புகைப்படம், வசனத்தை பயன்படுத்தியதாக கவுண்டமணி சிக்ஸர் படக்குழுவிற்கு நோட்டீஸ் !

அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வைபவ் நடித்து இன்று வெளியாகியுள்ள 'சிக்சர்'  திரைப்படத்தில் வைபவ் மாலை 6 மணிக்குமேல் கண்பார்வை தெரியாமல் மாலைக்கண் நோயால் அவதிப்படுபவர் போல் கதையம்சம் கொண்டுள்ளது, இதேபோல் கவுண்டமணி சின்ன தம்பி படத்தில் நடித்திருப்பார். அப்படத்தில் இடம்பெறும் வசனங்களையும், புகைப்படத்தையும் தமது அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்காக, நடிகர் கவுண்டமணி சார்பில் படக்குழுவிற்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கவுண்டமணியின் வழக்கறிஞர் சசிகுமார் என்பவர் அனுப்பியுள்ள நோட்டீசில், சிக்சர் படத்தில் கவுண்டமணி அனுமதியின்றி புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. வசனங்களையும் தவறான முறையில் படத்தில் பயன்படுத்தியதாகவும், இதற்கு தயாரிப்பாளர்கள் தினேஷ், ஸ்ரீதர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது.