ஆர் ஜெ வாக இருந்து வில்லனாக மாறிய அர்ஜுன் தாஸ் !
சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் கைதி படத்தில் அனைவராலும் பாராட்டபட்டவர் அர்ஜுன் தாஸ். அன்பு என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். அர்ஜுன் தாஸ் நடிக்கவருவதற்கு முன் பிரபலமான வானொலியில் ஆர்.ஜே வாக பணிபுரிந்தவர். படத்தில் நடித்தது பற்றி அர்ஜுன் கூறுகையில், தன் குரலை வைத்தே தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன் ஆர்.ஜே வாக இருந்தேன், முதலில், இப்படத்தில் நடிக்க தயங்கினேன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் என்னை நடிக்க சம்மதிக்க வைத்தார் படத்தில் பல சண்டைக்காட்சிகளில், எனக்கு அடிபட்டது அதற்காக மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறினார். ஆனால் திரையரங்கில் அவருக்கு கிடைத்த மக்களின் ஆரவாரம் அவ்வலியை மறக்கடித்துவிட்டதாக கூறினார். அர்ஜுன் தாஸ் அடுத்ததாக கும்கி 2 மற்றும் அந்தகாரம் படங்களில் நடிக்க உள்ளார்.