இணையத்தை கலக்கிவரும் ரம்யாகிருஷ்ணனின் குயின் வெப் சீரிஸ் !
'தி குயின்'என்ற பெயரில் அனிதா சிவகுமாரன் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி குயின் வெப் சீரிஸ் இயக்கப்பட்டுள்ளது. இதனை கெளதம்மேனனும், பிரஷாந்த் முருகேசனும் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இல்லை என்றாலும் இதில் வரும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அவரின் வாழ்க்கையோடு ஒத்து போகிறது. ஜெயலலிதாவின் பெயர் ஷக்தி சேஷாத்திரி என்றும், M.G.R.கதாபாத்திரம் G.M.R என்றும், கருணாநிதியின் பெயர் கருணாமூர்த்தி என்றும் வைக்கப்பட்டுள்ளது.M.G.R ஆரின் மனைவியின் பெயர் ஜானகிக்கு பதில் ஜனனி என்று வடிவமைக்கபட்டு அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையேயான மனக்கசப்பையும் மேலும் அந்த விஷயத்தை ஜானகி அவர்கள் எப்படி பக்குவமாக கையாண்டார்கள் என்பதை பற்றி இதில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். மிகமுக்கியமாக தாயாக வரும் சோனியா அகர்வால், இளம்வயது ஷக்தியாக வரும் அஞ்சனா ஜெயப்ரகாஷ், MGR பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். இயக்குனர் ஸ்ரீதர் பாத்திரத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார். குயின் வெப்செரிசின் பலமே படத்தின் ஒளிப்பதிவுதான், இந்த வெப்சீரிஸின் ஜீவனை சிவா தன்னுடைய ஆத்மார்த்தமான பின்னணி இசையால் தாங்குகிறார். 13 தொடர்களையும் நேர்த்தியாக படமாக்கி உள்ளனர்.