இந்தியன் 2 ல் கமலுடன் இணையவிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், பவனி ஷங்கர் !
இந்தியன் 2 படம் கைவிடப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை மீண்டும் துவங்குகிறார்கள். ஆகஸ்ட் 19ம் தேதி மீண்டும் படப்பிடிப்பு துவங்குகிறதாம். பட்ஜெட் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டபோது ஷங்கரும், கமலும் சேர்ந்து தான் லைகா நிறுவனத்தை சமாதானம் செய்து படத்தை தயாரிக்க வைத்துள்ளார்கள். லைகா ஒத்து வரவில்லை என்றால் வேறு தயாரிப்பாளரை தேட வேண்டும் என்ற முடிவுக்கு ஷங்கர் வந்த நிலையில் தான் சமரசம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்கும் இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் காஜல் அகர்வால் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மேலும் இருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ப்ரியா பவானி சங்கரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். ப்ரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் படம் முழுக்க வரக்கூடியது. இதனால் காஜல் அகர்வால் கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளார். இருந்தாலும் உலகநாயன் படமென்பதால் அமைதியாக இருக்கிறார்.