இப்போதைக்கு திருமணத்தில் நாட்டமில்லை – சொல்கிறார் மாங்கனி அனு இமானுவேல் !

தெலுங்கில் நடித்துவந்த அனு இமானுவேல், துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ்க்கு அறிமுகமானார். அதன்பிறகு இவர் நடித்து அண்மையில் வெளியான நம்ம வீடு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் நன்கு அறிந்த நடிகையானார். இவர் தற்சமயம் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியானது. இச்செய்தியை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் திருமணம் என்பது அழகான அற்புதமான உணர்வு, நிச்சயமாக நான் காதலித்து தான் கல்யாணம் செய்வேன், அதேசமயம் இதை எல்லோருக்கும் அறிவித்துவிட்டு தான் கல்யாணம் செய்வேன். ஆனால் அதற்கு சில ஆண்டுகள் உள்ளது என்றார்.