இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன் – ரசிகர்கள் கொண்டாட்டம் !
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆன பின்னரும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சிகள் எடுத்து வருவதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் 'முதல்முறையாக நானும் அப்பாவும் இணைந்து 'மாமனிதன்' படத்தில் பணிபுரிந்து உள்ளோம். எனவே 'மாமனிதன்' படத்தின் ஆல்பம் இசை பிரியர்களுக்கு ஒரு சர்ப்ரைசாக இருக்கும் என்பதை நான் உறுதி கூறுகிறேன் என்று கூறியுள்ளார். இளையராஜா சமீப காலமாக அவர் பல சர்ச்சைகளுக்கு முற்றிப்புள்ளி வைத்து அனைவரிடமும் இணக்கமாக போகும் சூழலை காண முடிகிறது. அப்பா மற்றும் மகன் என இரு இசை அமைப்பாளர்கள் இசைஞானியும் இளைய இசைஞானியும் இணைந்து கொடுக்கும் இசைவிருந்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.