ஒரே நாளில் இரண்டு அடி: சோகமே உருவாக இருக்கும் கமலஹாஸன்

நடிகரும், நாடக எழுத்தாளரும், கதை-வசன கர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் மாரடைப்பால் நேற்று பிற்பகல் 2 மணிக்கு உயிர் இழந்தார். அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே கமலஹாஸன் அங்கு வந்துவிட்டார். கிரேஸி மோகன் உயிர் பிரிந்த பிறகு மருத்துவமனையில் இருந்து கிளம்பிய கமல் ஹாஸனின் முகத்தை பார்த்தவர்களுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே கிரிஷ் கர்னாட் காலமான செய்தி அறிந்து கவலையில் இருந்தார் கமல். ரையுலகில் கமல் ஹாஸன், வசனகர்த்தா கிரேஸி மோகன் கூட்டணியில் உருவான படங்கள் அனைத்துமே எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. மைக்கேல் மதனகாமராஜன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, தெனாலி, காதலா காதலா, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். ஆகிய படங்கள் கமல், கிரேஸி மோகன் கூட்டணியில் உருவான அற்புத படைப்புகள் என்றே கூற வேண்டும். பலர் காமெடி பண்ணுகிறேன் என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களை பயன்படுத்தாதவர். சிரிப்பு வெடியை சரவெடியாய் வெடித்துவிட்டு தற்போது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டார். ஒரே நாளில் இருபெரும் ஜாம்பவான்களை இழந்து விட்டது இத்திரையுலகம். நடிகர் அஜித்துடன் ஒரு படத்தில் கூட பணியாற்ற முடியவில்லையே என்பது தான் கிரேஸி மோகனின் பெரிய வருத்தமாக இருந்துள்ளது.