கவின் – லொஸ்லியா காதலுக்கு கிட்டத்தட்ட சங்கு ஊதிய கரார் கமல்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸின் மூன்றாவது எப்பிசோட், முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக அழைத்து அட்வைஸ் செய்த கமல், லொஸ்லியாவிடம் மட்டும் கொஞ்சம் கராராகவே பேசினார். உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு வேறு எந்த இலங்கை பெண்ணுக்கும் கிடைக்கவில்லை. அதனால், இதை விளையாட்டாக பார்க்காமல் போடியாக பாருங்கள், உங்கள் மீது ஏராளமானவர்கள் பொறாமை அடைந்திருப்பார்கள், அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் உங்களை விட நன்றாக செய்திருக்கலாம், என்று கூட நினைக்க தோன்றும், அதனால் சீரியஸாக இருங்கள், என்று வெளுத்து வாங்கிவிட்டார். இதற்கு காரணம் லொஸ்லியா கவினுடன் காதல்மொழி பேச மைக்கின் பேட்டரியை கழற்றிவைத்து பேசி இருக்கிறார். இதுபோன்ற செயல்முறைகள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விதிமீறலாகும்.