Cine Bits
சசிகுமார் நிகி கல்ராணி நடிப்பில் ராஜ வம்சம்
பேட்ட' படத்திற்கு பிறகு சசிகுமார் `நாடோடிகள் 2', கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். சுந்தர்.சி-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் – நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.