Cine Bits
சத்தமில்லாமல் ஸ்டண்ட் யூனியனுக்கு உதவி செய்த தளபதி
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோக்கள் எல்லாம், அந்த அங்கீகாரம் பெறுவதற்கு முக்கியமானது ஸ்டண்ட் காட்சிகள் தான். அதில் நடிகர்களின் மாஸ் ஏறுமளவுக்கு ஸ்டண்ட் கலைஞர்களின் காயங்களும் அதிகரிக்கும். அப்படிபட்ட ஸ்டண்ட் கலைஞர்களுக்கு முன்னணி நடிகர்கள் பலர் உதவி வருகிறார்கள். அப்படி தளபதி விஜயும் அந்த கலைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கு செய்திருந்த உதவியை தற்போது ஒரு ஸ்டண்ட் பிரபலம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல தெறி படத்தில் கரிகாலன் என்ற பேரில் வரும் ஸ்டண்ட் சிவா, அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய் சார் ஒரு சமயத்தில் ஸ்டண்ட் யூனியனுக்காக 1.5 லட்சம் வழங்கினார் என்று கூறியுள்ளார்.