சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் படத்துக்கு பூஜை போட்டாச்சு !
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் ஆரம்பமானது. சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணனை பெஸ்ட்டு பெஸ்ட்டு என விளம்பரப் படங்களில் ஆட வைத்த விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர். இந்த படத்தில் சரவணனுக்கு ஜோடியாக, கீத்திகா திவாரி எனும் மாடல் அழகி நாயகியாக அறிமுகமாகிறார். சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் எந்த ஒரு ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில், சரவணனுக்கு ஜோடியாக, கீத்திகா திவாரி எனும் மாடல் நாயகியாக அறிமுகமாகிறார். சரவணா ஸ்டோர்ஸ் ஓனரின் இந்த அறிமுக படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.