சிபி ராஜுடன் இணையும் விஸ்வரூப நடிகை !

கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் கபடதாரி. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்த படத்தில் நடிகர் சிபிராஜ்  கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நந்திதா நடிக்க நாசர், ஜெயப்ரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்பொழுது இவர்களுடன் கமலின் விஸ்வரூபம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்ற பூஜா குமார் இணைத்திருக்கிறார்.